Wednesday, August 1, 2012

Hi frds.....

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும்  இலவச ஹாலிவுட் மென்பொருள்.

வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ,நம் வீடியோவை edit செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது...

வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள்  நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
மென்பொருள் தறவிரக்க முகவரி :http://www.lightworksbeta.com
இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தானை சொடுக்கி இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் Open source தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

 

Sunday, July 8, 2012

Top 10 computer mouse tips

Most computer users don't take full advantage of the computer Mouse. Below are computer mouse tips and secrets that help you get the full potential of your computer mouse and increase your overall productivity while on the computer.

Shift key and mouse click

Many text editors and programs allow you to highlight all or portions of text using the Shift key and the mouse. For example, place the cursor at the beginning of a paragraph, hold down the Shift key and click at the end of the paragraph to highlight the full paragraph......


Take full advantage of the scroll wheel

Today, everyone is fully aware of a mouse wheels ability to scroll up and down on a page. However, this wheel can also do so much more, as shown below.
  • The mouse wheel is not just a wheel, it can also be used as a button. Pressing down on the wheel will act like a third mouse button. This can be used to open a web page in a tab by clicking the wheel on any link and can also be used to close a tab by clicking the wheel on any open tab.
  • Quickly Zoom in and Out on a web page, word document, excel spreadsheet, etc. by holding down the Ctrl key and scrolling up to zoom in and down to zoom out.
  • Move forward and backwards while browsing the Internet by holding down the Shift key and scrolling up and down. Scrolling down goes back and scrolling up goes forward.

Select with double and triple click

Any word can be selected by double-clicking the word. If you want to highlight the whole paragraph, click the mouse button three times on any text in the paragraph.

Use the right-click

Take full advantage of the right-click any time you highlight text or wish to view the properties of an object. For example, if you highlight a file or text, you can right-click that highlighted item copy it and then right-click anywhere else to paste it.
Tip: If you right-click on any file or text and drag it while continuing to hold the right button, when you let go you will be given the option to move or copy that file or text. This saves you the extra step of having to right-click where you want to paste the item.
Tip: While in a browser pressing and holding Ctrl while clicking on any link will open that link in a new tab.

Ctrl key and mouse click or highlight

While holding down the Ctrl key you can left-click to select multiple objects or highlight multiple sections of text. For example, in Microsoft Windows you could hold down the Ctrl key and click to select multiple files at once. If you wanted to highlight different parts of a paragraph or web page, you could also hold down the Ctrl key and select each section you wanted to copy.
Tip: Mozilla Firefox users can also hold down the Ctrl key and individually click on each cell in a table they wish to copy or drag their mouse down a row to select just that row or text without selecting any of the other text in that table.

Use the mouse side buttons

Many new computer mice have buttons on the side of the mouse. These buttons can be programmed to do anything, however, by default the left-thumb button can be used to go back on a web page. This makes browsing the Internet more enjoyable since you do not need to move the mouse cursor to the browser back arrow button in order to go back a page.

Use the Windows Snap To feature

Take full advantage of the Windows mouse Snap To feature, which will automatically move your mouse to buttons that appear in a dialog box. For example, if you delete a file or close a window you may get a prompt asking you if you are sure you want to perform the task. With the Snap To feature enabled, the mouse cursor automatically moves to the Ok button, so all you will have to do is click the mouse button if you agree. This saves you the time of having to move the mouse cursor over to the Ok button and then click Ok. To enable this feature open the Mouse properties under the Windows Control Panel and check the Snap To check box under the Pointer Options tab.
Tip: While changing this feature we also suggest looking at other available options in the Mouse settings. For example, increasing the Motion speed can also help increase your productivity while using the mouse.

Manage the open window with the mouse

Double-click the top title bar of any window to maximize a window or if it is already maximized resize it to a window. You can also double-click the icon for the window in the top-left corner of the window to close that window.

Move the mouse with your keyboard

Instead of using the mouse that came with your computer you can also enable Windows to use the number pad as a mouse.

Customize your mouse

Finally, if you have a mouse with more than two buttons, installing the included mouse software will allow you to customize the mouse even more. For example, if you don't use the side buttons to move back and forth in a web page change it to something you do more often, such as switching between open windows or opening the calculator.
10 விசைப்பலகை குறுக்குவழிகள் உள்ளன.

Ctrl + C or Ctrl + Insert
Copy 
Ctrl + V or Shift + Insert
Ctrl + Z and Ctrl + Y
Undo  Ctrl + Y would redo the undo.
Ctrl + F
Open the Find in any program. This includes your Internet browser to find text on the current page.
Alt + Tab or Alt + Esc
Quickly switch between open programs moving forward.
Tip: Press Ctrl + Tab to switch between tabs in a program.
Tip: Adding the Shift key to Alt + Tab or Ctrl + Tab will move backwards. For example, if you are pressing Alt + Tab and pass the program you want to switch to, press Alt + Shift + Tab to move backwards to that program.
Tip: Windows Vista and 7 users can also press the Windows Key + Tab to switch through open programs in a full screenshot of the Window.
Ctrl + Back space and Ctrl + Left or Right arrow
Pressing Ctrl + Backspace will delete a full word at a time instead of a single character.
Holding down the Ctrl key while pressing the left or right arrow will move the cursor one word at a time instead of one character at a time. If you wanted to highlight one word at a time you can hold down Ctrl + Shift and then press the left or right arrow key to move one word at a time in that direction while highlighting each word.
Ctrl + S
While working on a document or other file in almost every program pressing Ctrl + S will save that file. This shortcut key should be used frequently anytime you're working on anything important.
Ctrl + Home or Ctrl + End
Move the cursor to the beginning or end of a document.
Ctrl + P
Print the page being viewed. For example, the document in Microsoft Word or the web page in your Internet browser.
Page Up, Space bar, and Page Down
Pressing either the page up or page down key will move that page one page at a time in that direction. When browsing the Internet pressing the space bar will also move the page down one page at a time. If you press Shift and the Space bar the page will go up a page at a time.


.....

Monday, July 2, 2012

கூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட

இணையத்தில் Google என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் ஒன்று கூகுள் தேடியந்திரம் (Search Engine). Google-ல் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை.  அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை. PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோகப்படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் நமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம்.
  • நீங்கள் முதலில் Google தளத்திருக்கு செல்லுங்கள்.
  • நீங்கள் தேடுவதற்கு பொருத்தமான வார்த்தையை கொடுத்து அதற்கு அருகே Filetype:pdf என்று கொடுக்கவும்.
  • பின்பு search button அழுத்தவும்.
  • இப்பொழுது  உங்களின் தேடலின் முடிவுகள் அனைத்தும் pdf பைல்களாகவே வந்திருக்கும்.
  • இதை உறுதி படுத்தும் வண்ணம் அனைத்து முடிவுகளுக்கு முன்னும் [PDF] என்று
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய PDF பைலை நீங்கள் தேடி பெறலாம்.

Saturday, June 30, 2012

தங்களின் கணினியில் முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூடாத செயல்கள்

நம் கணினியில் மிக சிறிய தவறான செயல்களை செய்வதால் கூட நமது கணினி முடக்கப்படும். அபாயகரமான செயல்களை நம்மை அறியாமலே நமது கணினியில் சில சமயங்களில் செய்துவிடுகிறோம். ஏன் நான் கூட கணினி வாங்கி அறம்பகாலத்தில் இது மாதிரியான செயல்களை மேற்கொண்டு ஒரே மாதத்தில் மூன்று முறை பதிந்துள்ளேன் புதியதாக. நம் கணினியில் என்னவென்று தெரியாத எந்த செயலையும் தேவையில்லாமல் மேற்கொள்ள வேண்டாம். அதுவே மிக பெரிய ஆபதாக அமைந்துவிடலாம்.
 தங்களின் கணினியில் மேற்கொள்ள கூடாது சில செயல்கள்:

01. கணினியில் நீங்கள் பார்த்துயிருப்பீர்கள், C DRIVEவில் WINDOWS என்னும் FOLDER மறைத்து வைக்கபட்டுயிருக்கும். எனெனில் இந்த போல்டரில் உள்ள பைல்கள் அனைத்தும் சிஸ்டம் பைல்கள், இவை தான் தங்களின் கணினியை இயக்குகின்றன. இதனை திறந்து பயன்படுத்தகூடாது அல்லது அழிக்க கூடாது. இங்கு உள்ள ஏதேனும் ஓர் சிறிய பைலை டிலைட் செய்தால் கூட தங்களின் கணினி இயங்கமறுக்கும்.  
தங்களின் WINDOWS போல்டர் மறைத்துவைக்க படவில்லையா கவலை வேண்டாம். இதனை மேற்கொள்ள
My Computer > C Drive > Windows கிளிக் செய்து கொள்ளுங்கள், பின்னர் LEFT SIDEயில் SYSTEM TASKSயில் Hide the Contents of this Folder என்பதை கிளிக் செய்யவும்.

02. தாங்கள் அடிக்கடி பென்டிரைவ் போன்ற டேட்டா டிரவலர்களை பயன்படுத்துகின்றவறா! தங்களின் பென்டிரைவில் தகவலை பதிந்துவிட்டிர்க்ள என்றால் அதனை அப்படியே நீக்கிவிடகூடாது. ஏனெனில் தங்கள் டிரைவ் தங்களுக்கு தெரியாமலே ஏதேனும் ஓர் செயலில் கணினியுடன் இயங்கி கொண்டியிருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் திடீரென அதை நீக்கினால், டேட்டாக்களை இழக்க நேரிடும் மேலும் தங்களின் பென்டிரைவும் இயங்காதா சூழ்நிலை ஏற்ப்படும். ஆதலால் பென்டிரைவினை நீக்க எண்ணினால், தங்களின் கணினியில் SAFELY REMOVE HARDWARE > STOP என்பதை கிளிக் செய்து, பின்னர் SAFE TO REMOVE HARDWAREஎன்ற செய்தி கிடைத்ததும், பென்டிரைவினை நீக்கவும்.

03. தங்களின் கணினி ஏதேனும் ஓர் காரணத்தில் அப்படியே உறைந்து போய்விட்டால், மேற்கொண்டு எந்த செயலையிம் மேற்கொள்ள வேண்டாம். சிறிது நேரம் காத்திருக்கவும், இந்த நிலை மாறிவிடும்.

04. தங்களின் கணினி AUTOMATIC UPDATES என்பதைனை ஆன் செய்யவும். இதனால் தங்களின் கணினி இணையத்தில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள பைல்களை தானாகவே அப்டேட் செய்துக்கொள்ளும். START > CONTROL PANEL > SECURITY CENTER சென்று Turn on Automatic Updates என்பதனை தேர்வு செய்யவும். இதனால் தங்களின் கணினி மேலும் பலம் பெரும்.

05. குறைந்த விலையில் கிடைக்கும் சாப்ட்வேர் சிடிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கண்டிப்பாக அதில் வைரஸ்கள் இருக்கும். நீங்கள் சென்னையா! அப்படி என்றால் சென்னையில் மவுண்ட்ரோட்டில் உள்ள RICH STREETயில் குறைந்த விலையில் பழைய மென்பொருட்கள் சிடிகள் கிடைக்கும். அதை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தவும்.

Stand By Mode என்றால் என்ன என்று தங்களுக்கு தெரியுமா!

Stand By Mode என்றால் என்ன என்று தங்களுக்கு தெரியுமா! இது தங்களின் கணினியின் மின்சார பயன்பாட்டை குறைக்க பயன்படும் ஓர் செயல்முறை.
நீங்கள் ஏதேனும் ஓர் செயலை தங்களின் கணினியில் மேற்கொண்டுயிருக்கீறிர்கள், அப்போது தங்களுக்கு ஓர் அவசர வேலை ஒன்று செய்ய வேண்டியுள்ளது. 5நிமிடம் அல்லது 10நிமிடம் வேலை என்றால் சரி... கணினியை, விட்டு அந்த வேலையை மேற்கொள்ளலாம்.
இதுவே 1 அல்லது 2 மணி நேர வேலையென்றால் நீங்க என்ன செய்வீங்க. தங்களின் கணினி வேலையை நிறுத்திவிட்டு, தங்களின் அவசர வேலையை மேற்கொள்வீர்கள். சிலர் கணினியை ஆப் செய்யாமலே விட்டுவிடுவார்கள். இந்த மாதிரி செயலினால் தங்களின் மின்சார செலவு அதிகரிக்கும். மேலும் இந்த கோடை காலத்தில் ஏசி இல்லாதவர்கள் அதிக நேரம் கணினியை பயன்படுத்த கூடாது. மேலும் ஓர் செயலை நாம் தற்காலிகமாக் நிறுத்திவிட்டால் அதை தொடர்ந்து மேற்கொள்ளும் போது அதே உற்சாகம் இருக்கும் என கண்டிப்பாக கூற முடியாது. இதற்கு தீர்வு தான் என்ன.

மேற்கொண்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே எளிய தீர்வு. Stand By Mode தான். இதனை எப்படி மேற்கொள்வது, இதற்கு முதலில் Start பட்டனை அழுத்தி Turn Of Computer என்பதை கிளிக் செய்யவும். அதில் Stand By என்பதனை கிளிக் செய்ய்வும். அவ்வளவு தான்.

அது சரி இதன் பயன் மற்றும் செயல் என்ன. அதாவது நீங்கள் மேற்கொண்ட செயல்முறைகளை மேற்கொண்டால் Stand By முறை செயல்படுத்தப்படும். இந்த முறை செயல்படுத்தப்பட்டவுடன் தங்களின் கணினி ஆப் ஆகிவிட்டதை போல் தோன்றும் ஆன் ஆப் ஆகாது. தங்களின் கணினியுடன் இணைக்கப்பட்டு உள்ள கீ-போர்ட், மவுஸ், சிபியு போன்றவற்றை தொட்டாலோ அல்லது அசைத்தாலோ தங்களின் கணினி மீண்டும் இயக்கப்படும். இயக்கப்படும் என்றால் கடைசியாக தாங்கள் என்ன மேற்கொண்டு இருந்தீர்களோ அது அனைத்தும் அப்படியே செயல்பட்டு கொண்டுயிருக்கும். உதரணமாக: Stand By முறை செயல்படுத்தும் முன்பு தாங்கள் பிரவுசர் மற்றும் நோட்பேட் பயன்படுத்திகொண்டுயிருந்தால். மீண்டும் கணினி ஆன் ஆகும் போது அவை அனைத்துமே செயல்ப்பட்டு கொண்டுயிருக்கும்.

இதன் சிறப்பு மற்றும் பயன் என்ன?
நீங்கள் Stand By முறையில் தங்கள் கணினியை செட் செய்தவுடன், தங்களின் கணினியின் சிபியு மின்சார சேவை நிறுத்தப்படும். இதனால் மின்சார சிக்கனத்தை மேற்கொள்ளலாம். இனி தாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானலும் தங்களின் கணினியை Stand By Modeயில் போட்டு வைக்கலாம். மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.  மேலும் தங்களின் கணினி வேலையிலும் எந்த தடையும் இருக்காது.

Wednesday, June 27, 2012

altநீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.

இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.