Saturday, June 30, 2012

தங்களின் கணினியில் முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூடாத செயல்கள்

நம் கணினியில் மிக சிறிய தவறான செயல்களை செய்வதால் கூட நமது கணினி முடக்கப்படும். அபாயகரமான செயல்களை நம்மை அறியாமலே நமது கணினியில் சில சமயங்களில் செய்துவிடுகிறோம். ஏன் நான் கூட கணினி வாங்கி அறம்பகாலத்தில் இது மாதிரியான செயல்களை மேற்கொண்டு ஒரே மாதத்தில் மூன்று முறை பதிந்துள்ளேன் புதியதாக. நம் கணினியில் என்னவென்று தெரியாத எந்த செயலையும் தேவையில்லாமல் மேற்கொள்ள வேண்டாம். அதுவே மிக பெரிய ஆபதாக அமைந்துவிடலாம்.
 தங்களின் கணினியில் மேற்கொள்ள கூடாது சில செயல்கள்:

01. கணினியில் நீங்கள் பார்த்துயிருப்பீர்கள், C DRIVEவில் WINDOWS என்னும் FOLDER மறைத்து வைக்கபட்டுயிருக்கும். எனெனில் இந்த போல்டரில் உள்ள பைல்கள் அனைத்தும் சிஸ்டம் பைல்கள், இவை தான் தங்களின் கணினியை இயக்குகின்றன. இதனை திறந்து பயன்படுத்தகூடாது அல்லது அழிக்க கூடாது. இங்கு உள்ள ஏதேனும் ஓர் சிறிய பைலை டிலைட் செய்தால் கூட தங்களின் கணினி இயங்கமறுக்கும்.  
தங்களின் WINDOWS போல்டர் மறைத்துவைக்க படவில்லையா கவலை வேண்டாம். இதனை மேற்கொள்ள
My Computer > C Drive > Windows கிளிக் செய்து கொள்ளுங்கள், பின்னர் LEFT SIDEயில் SYSTEM TASKSயில் Hide the Contents of this Folder என்பதை கிளிக் செய்யவும்.

02. தாங்கள் அடிக்கடி பென்டிரைவ் போன்ற டேட்டா டிரவலர்களை பயன்படுத்துகின்றவறா! தங்களின் பென்டிரைவில் தகவலை பதிந்துவிட்டிர்க்ள என்றால் அதனை அப்படியே நீக்கிவிடகூடாது. ஏனெனில் தங்கள் டிரைவ் தங்களுக்கு தெரியாமலே ஏதேனும் ஓர் செயலில் கணினியுடன் இயங்கி கொண்டியிருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் திடீரென அதை நீக்கினால், டேட்டாக்களை இழக்க நேரிடும் மேலும் தங்களின் பென்டிரைவும் இயங்காதா சூழ்நிலை ஏற்ப்படும். ஆதலால் பென்டிரைவினை நீக்க எண்ணினால், தங்களின் கணினியில் SAFELY REMOVE HARDWARE > STOP என்பதை கிளிக் செய்து, பின்னர் SAFE TO REMOVE HARDWAREஎன்ற செய்தி கிடைத்ததும், பென்டிரைவினை நீக்கவும்.

03. தங்களின் கணினி ஏதேனும் ஓர் காரணத்தில் அப்படியே உறைந்து போய்விட்டால், மேற்கொண்டு எந்த செயலையிம் மேற்கொள்ள வேண்டாம். சிறிது நேரம் காத்திருக்கவும், இந்த நிலை மாறிவிடும்.

04. தங்களின் கணினி AUTOMATIC UPDATES என்பதைனை ஆன் செய்யவும். இதனால் தங்களின் கணினி இணையத்தில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள பைல்களை தானாகவே அப்டேட் செய்துக்கொள்ளும். START > CONTROL PANEL > SECURITY CENTER சென்று Turn on Automatic Updates என்பதனை தேர்வு செய்யவும். இதனால் தங்களின் கணினி மேலும் பலம் பெரும்.

05. குறைந்த விலையில் கிடைக்கும் சாப்ட்வேர் சிடிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கண்டிப்பாக அதில் வைரஸ்கள் இருக்கும். நீங்கள் சென்னையா! அப்படி என்றால் சென்னையில் மவுண்ட்ரோட்டில் உள்ள RICH STREETயில் குறைந்த விலையில் பழைய மென்பொருட்கள் சிடிகள் கிடைக்கும். அதை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தவும்.

Stand By Mode என்றால் என்ன என்று தங்களுக்கு தெரியுமா!

Stand By Mode என்றால் என்ன என்று தங்களுக்கு தெரியுமா! இது தங்களின் கணினியின் மின்சார பயன்பாட்டை குறைக்க பயன்படும் ஓர் செயல்முறை.
நீங்கள் ஏதேனும் ஓர் செயலை தங்களின் கணினியில் மேற்கொண்டுயிருக்கீறிர்கள், அப்போது தங்களுக்கு ஓர் அவசர வேலை ஒன்று செய்ய வேண்டியுள்ளது. 5நிமிடம் அல்லது 10நிமிடம் வேலை என்றால் சரி... கணினியை, விட்டு அந்த வேலையை மேற்கொள்ளலாம்.
இதுவே 1 அல்லது 2 மணி நேர வேலையென்றால் நீங்க என்ன செய்வீங்க. தங்களின் கணினி வேலையை நிறுத்திவிட்டு, தங்களின் அவசர வேலையை மேற்கொள்வீர்கள். சிலர் கணினியை ஆப் செய்யாமலே விட்டுவிடுவார்கள். இந்த மாதிரி செயலினால் தங்களின் மின்சார செலவு அதிகரிக்கும். மேலும் இந்த கோடை காலத்தில் ஏசி இல்லாதவர்கள் அதிக நேரம் கணினியை பயன்படுத்த கூடாது. மேலும் ஓர் செயலை நாம் தற்காலிகமாக் நிறுத்திவிட்டால் அதை தொடர்ந்து மேற்கொள்ளும் போது அதே உற்சாகம் இருக்கும் என கண்டிப்பாக கூற முடியாது. இதற்கு தீர்வு தான் என்ன.

மேற்கொண்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே எளிய தீர்வு. Stand By Mode தான். இதனை எப்படி மேற்கொள்வது, இதற்கு முதலில் Start பட்டனை அழுத்தி Turn Of Computer என்பதை கிளிக் செய்யவும். அதில் Stand By என்பதனை கிளிக் செய்ய்வும். அவ்வளவு தான்.

அது சரி இதன் பயன் மற்றும் செயல் என்ன. அதாவது நீங்கள் மேற்கொண்ட செயல்முறைகளை மேற்கொண்டால் Stand By முறை செயல்படுத்தப்படும். இந்த முறை செயல்படுத்தப்பட்டவுடன் தங்களின் கணினி ஆப் ஆகிவிட்டதை போல் தோன்றும் ஆன் ஆப் ஆகாது. தங்களின் கணினியுடன் இணைக்கப்பட்டு உள்ள கீ-போர்ட், மவுஸ், சிபியு போன்றவற்றை தொட்டாலோ அல்லது அசைத்தாலோ தங்களின் கணினி மீண்டும் இயக்கப்படும். இயக்கப்படும் என்றால் கடைசியாக தாங்கள் என்ன மேற்கொண்டு இருந்தீர்களோ அது அனைத்தும் அப்படியே செயல்பட்டு கொண்டுயிருக்கும். உதரணமாக: Stand By முறை செயல்படுத்தும் முன்பு தாங்கள் பிரவுசர் மற்றும் நோட்பேட் பயன்படுத்திகொண்டுயிருந்தால். மீண்டும் கணினி ஆன் ஆகும் போது அவை அனைத்துமே செயல்ப்பட்டு கொண்டுயிருக்கும்.

இதன் சிறப்பு மற்றும் பயன் என்ன?
நீங்கள் Stand By முறையில் தங்கள் கணினியை செட் செய்தவுடன், தங்களின் கணினியின் சிபியு மின்சார சேவை நிறுத்தப்படும். இதனால் மின்சார சிக்கனத்தை மேற்கொள்ளலாம். இனி தாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானலும் தங்களின் கணினியை Stand By Modeயில் போட்டு வைக்கலாம். மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.  மேலும் தங்களின் கணினி வேலையிலும் எந்த தடையும் இருக்காது.

Wednesday, June 27, 2012

altநீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.

இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

Saturday, June 16, 2012

 
 
Portable மென்பொருட்கள் என்றால் என்ன? கணினியில் நிறுவாமல் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களே Portable மென்பொருள் எனப்படுகிறது. மென்பொருட்களை கணினியில் நிறுவும்போது Hard Disk இல் அதிக இடத்தை பிடித்துக்கொள்கிறது. நாம் சிறிய சிறிய மென்பொருட்களை அளவுக்கதிகமாக கணினியில் நிறுவும்போது இடப்பற்றாக்குறை ஏற்படும் அதேவேளை, கணினியின் வேகமும் குறைவடைகிறது. Portable மென்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம்.

அத்தோடு இவற்றை Pen Drive இலும் எடுத்து சென்று பயன்படுத்தலாம். கணினியில் நிறுவ வேண்டிய தேவை இல்லாதபடியால் Pendrive இல் எடுத்து சென்று பயன்படுத்துவது வேலைகளை இலகுபடுத்துகிறது. தற்போது சிறிய சிறிய மென்பொருள்களில் இருந்து Photoshop போன்ற பெரிய மென்பொருள்கள்வரை Portable Software ஆக கிடைக்கிறது.


இங்கு 50 இற்கும் மேற்பட்ட Portable மென்பொருட்களை வகைப்படுத்தி தருகிறேன்.

இவற்றை தரவிறக்க Downloads Page இற்கு செல்லுங்கள். மேலே நவிகேஷன் மெனுவில் Downloads என்பதை கிளிக் செய்யுங்கள். அல்லது இந்த இணைப்பில் செல்லுங்கள் Downloads
 
நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக/ நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? எந்த நேரமும் லேப்டாப் பாதுகாப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? எப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு.
சாதாரண Desk Top கணினிகளுடன் ஒப்பிடுகையில் லேப்டாப்களின் பாதுகாப்பு/ பராமரிப்பு அத்தியாவசியமானதும்  சிறிது கடினமானதும் கூட. இன்று அநேகமானோர் லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை கையாள்வதற்கான அடிப்படை வழிகளை கூட பின்பற்றுவதில்லை. அநேகமாக பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை வெளியில் எடுத்துச்சென்றுதான் பாவிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குரிய சரியான பாதுகாப்பை கொடுக்காவிட்டால், அந்த லேப்டாப்பின் பாவனை காலத்தை இழக்கவேண்டி இருக்கும். இங்கு லேப்டாப் பாதுகாப்பிற்கான சில வழிகளை தருகிறேன்.

திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கான மென்பொருள்

லேப்டாப்பை தொலைப்பவர்களை எடுத்து பார்த்தால் அவர்களில் பெரும்பாண்மையானவர்கள் தங்கள் லேப்டாப்பை வெளி இடங்களில் சார்ஜ் செய்யும்போதுதான் தொலைத்திருப்பார்கள்/ பறிகொடுத்திருப்பார்கள். இதை எப்படி தடுப்பது? அதற்கும் இருக்கிறது வழி. லேப்டாப்பை AC அடாப்டருடன் கூடிய Power Connector மூலமே சார்ஜ் இடுவோம். இந்த Power Connector ஐ அகற்றும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பக்கூடிய மென்பொருள்களை உபயோகிக்கலாம். இதற்கு பல மென்பொருள்கள் இருந்தாலும் ALARM என்ற மென்பொருள் சிறப்பானதும் இலவசமானதும். தரவிறக்க ALARM. இந்த மென்பொருளை நிறுவி விட்டால், Power Connector ஐ வேறு யாராவது அகற்றினால் உரத்த ஒலியை எழுப்பி உங்களை உசாராக்கிவிடும்

அடுத்த வழி Map அல்லது GPRS System மூலம் திருடப்பட்ட உங்கள் லேப்டாப் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது. அதற்கு Prey என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளை நிறுவி ( ஆன்லைனில்) உங்களுக்கான கணக்கு ஒன்றை ஆரம்பித்து விட்டால், உங்கள் லேப்டாப்பை யார் திருடினாலும் அவரது இருப்பிடத்தை/ அதாவது உங்கள் லேப்டாப் இருக்கும் இடத்தை Trace பண்ணி கண்டறியலாம். Prey மென்பொருள் உங்கள் லேப்டாப் உள்ள சரியான இடத்தை குறிப்பிட்டு காட்டுகிறது. அத்தோடு இந்த மென்பொருள் முற்றுமுழுதாக இலவசமாகும்.

Over Heat பிரச்சினை

எப்பொழுதும் உங்கள் லேப்டாப் Over Heat ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெப்பமான பிரதேசங்களில் அதிக நேரம் பாவிப்பதையும் தவிருங்கள். இப்படியான சம்பவங்களால் பாட்டரி பழுதடைய கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அதோடு அநேகமான சந்தர்ப்பங்களில் ஹார்ட் டிஸ்க் மற்றும் சில Internal parts ஐயும் பழுதடைய செய்துவிடும். சில வேளைகளிக் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும். ஆகவே லேப்டாப்பை வெளியில் எடுத்து செல்லமுன்னர் சுற்று சூழல் பற்றி அதிக கவனமெடுங்கள்.
  1. குளிரூட்டப்பட்ட அறைகளில் (Air conditioned) இருந்து சட்டென சாதாரண வெப்ப நிலையுள்ள பகுதிக்கு எடுத்து வராதீர்கள்.
  2. அப்படி மாறுபட்ட வெப்பநிலையுள்ள பிரதேசத்துக்கு மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டால் லேப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு எடுத்து செல்லுங்கள்.
  3. வெப்பநிலையான பிரதேசங்களில் ( சாதாரன வெப்பநிலையில் கூட) 2 மணித்தியாலங்களுக்கு மேலாக பாவிப்பதை தவிருங்கள்
  4. எங்கு சென்றாலும் லேப்டாப்புடன் ஒரு பொலுத்தீன் பையை எடுத்து செல்லுங்கள். பயணங்களின் போது லேப்டாப்பின் மீது நீர் படுவதை தவிர்க்கமுடியும்.
  5. Cool pad ஐ பாவிப்பது நல்லது. 2 மணிநேரத்துக்கு அதிகமாக பாவிக்கவேண்டியிருந்தால் Cool Pad ஐ உபயோகியுங்கள். லேப்டாப்பின் Heat ஐ ஓரளவிற்கு குறைக்கும்
  6. அவன் (Microwave Ovens), டிவிடி ப்ளேயர், டி.வி ஏனைய இலத்திரணியல் உபகரணங்களுக்கு அருகில் லேப்டாப்பை எடுத்து செல்வதை முற்றாக தவிருங்கள். இவற்றில் இருந்து வரும் காந்த சக்தி லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்கை நிச்சயம் பாதிக்கும்
  7. லேப்டாப்பை ஆஃப் செய்து ஒரு நிமிடத்துக்குள் மறுபடியும் ஆன் செய்யாதீர்கள். ஆகக்குறைந்தது 2 நிமிட இடைவெளியையாவது பேணுங்கள்.
  8. லேப்டாப் மீது நீர் படவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈரத்தன்மை காயும் வரை லேப்டாப்பை ஆன் செய்வதை தவிருங்கள். ஈரத்துடன் ஆன் செய்வதால் short circuit ஏற்பட வாய்ப்புள்ளது.
  9. அளவுக்கதிகமாக லேப்டாப்பை சார்ஜ் செய்யாதீர்கள். ஆரம்பத்தில் AC அடாப்டரை பழுதுபடுத்தும். பின்னர் காலப்போக்கில் லேப்டாப்பின் Internal Parts ஐ பாதிக்கும்
  10. அதிக மழைபொழிவின் போது சார்ஜ் இடுவதை தவிருங்கள். வீட்டில் இருந்தால் UPS மூலம் சார்ஜ் இட முயற்சியுங்கள்.
பாட்டரி பாதுகாப்பு

பலர் ஏனைய பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தினாலும் பாட்டரி விடயத்தில் கவனம் செலுத்த தவறுகின்றனர். இதனால் பாட்டரி குறுகிய காலத்துக்குள்ளேயே செயலிழந்து போகிறது. இதை தடுப்பதற்கு
  1. லேப்டாப்பை சார்ஜ் செய்யும்போது ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்
  2. சார்ஜ்ஜிங் முழுவதுமாக முடியும்வரை காத்திருங்கள். வழக்கமாக 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்
  3. சூரிய வெளிச்சமுள்ள இடங்களில் பாட்டரியை வெளியே எடுக்காதீர்கள்
  4. லேப்டாப்பையோ அல்லது பாட்டரியையோ வெப்பமுள்ள இடங்களில் வைக்காதீர்கள்.

மேலே குறிப்பிட்டவை பாட்டரியை பாதுகாப்பதற்கான External வழிகள். இப்போது சில Internal முறைகளை பார்ப்போம்
  1. Wi-fi,  Bluetooth போன்றவற்றை பாவிக்காதபோது ஆஃப் செய்துவிடுங்கள்
  2. பாட்டரி சார்ஜ் 50 % இற்கும் குறைவாக இருக்கும்போது High Resolution கொண்ட வீடியோ கேம்ஸ் விளையாடாதீர்கள். இப்படியான கேம்ஸ் பட்டரியை இரு மடங்கு வேகமாக சார்ஜ் ஐ குறைக்கும்
  3. USB port பட்டரி Life ஐ குறைக்கும். ஆகவே USB Mouse, Joystick,  Pen Drive போன்றவற்றை பாவிக்காத நேரங்களில் அகற்றிவிடுங்கள்.
  4. லேப்டாப் Screen ஐ மாத்திரம் ஆஃப் செய்யும் மென்பொருள்களை உபயோகித்து தேவையற்ற நேரங்களில் Screen ஐ ஆஃப் செய்துவிடுங்கள். TurnOffMonitor 1.0 இந்த மென்பொருளை நிறுவி Shift+F1 ஐ உபயோகித்து Screen ஐ ஆஃப்/ ஆன் செய்துகொள்ளலாம்
  5. தேவையில்லாதபோது சிடி ட்றைவில் உள்ள சிடிக்களை அகற்றிவிடுங்கள்
  6. Screen Server களை உபயோகிப்பதை தவிருங்கள்
  7. முக்கியமாக Screen இன் Brightness குறைத்து வையுங்கள்

Friday, June 15, 2012

ஒன்லைன் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு மில்லியன் கணக்கான பயனர்களைத் தன்னகத்தே கொண்டு ஸ்கைப்(Skype) முன்னணியில் திகழ்கிறது.
ஸ்கைப் இலவசமான அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதிகளை கொண்டுள்ள போதிலும், கைப்பேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தும் போது ஸ்கைப் கிரடிட் அவசியம் காணப்படுதல் வேண்டும்.
இவ்வாறு ஸ்கைப் கிரடிட்டினைக் கொண்டிராதவர்கள் குறித்த ஒரு நேரத்தில் ஒரு நபருக்கான அழைப்பை மேற்கொள்ளும்போது(கான்பரன்ஸ் அழைப்பு தவிர்ந்த) தமது விளம்பரங்களை இடம்பெறச் செய்யும் முயற்சியில் ஸ்கைப் நிறுவனம் இறங்கியுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் அறிமுகமாகவுள்ள Conversation Ads எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புதிய வசதியில் தமது விளம்பரங்களை இடம்பெறச் செய்வதற்கென இதுவரையில் 55 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.